Friday 12 June 2015



காமம் என்றால் என்ன?
ஹார்மோன் சுரபதின் விளைவா??
உடலின்பம் தேடும் படலமா??
நாம் அடக்கி வைத்த
வெறியின் வெளிபாடா??
நாம் ரசித்த கவர்ச்சியை
அடையும் சாலையா??
சஞலங்களையும், சபலத்தையும்
அடையும் சந்தர்ப்பமா??
.
.
.
காமம் - காதலை அடையும் அழகிய வழி..
ஆம் காமத்தில் காதல் இருக்கிறது...
ஈறுடல் சேர்ந்தால் வரும்
ஆனந்தம் காமமா??
சற்றே யோசியுங்கள்
கர்த்தர் முன்னிலையில்
முத்தமிடும்
மனமக்களிடம் இருப்பது
காதலா? இல்லை காமமா என்று...

காமதிற்க்கும் காதலுக்கும் இருக்கும்
நூல் அளவு வித்யாசம் தான்
"காதலை" அழகு படுத்துகிறது..
காமத்தில் காதலிருப்பதினால் மட்டுமே
வேதனை வலிகூட இன்பமளிக்கிறது..
சகமனிதராய் , சகோதரியாய்
பார்க்க தெரியாத "சாதான்களுக்கு "
தெரியாது காதலின் அருமையை..
ஆண்டு ஆயிரம் ஆயினும்
அவர்களால் உணர முடியாது
அதன் தூய்மையை..
பெண்ணின் காமத்தை வேட்டையாடி பெறாதே,
மனதை வென்று பெறு...
கற்பை சூறையாடுவதால்
உன் ஆண்மைக்கு அங்கீகாரம் இல்லை..
அவள் கனவுகளை நிறைவேற்றி
அவளை அடைந்துக்கொள்,
இவ்வுலகிள் உன்னைதவிர
வேரு யாவரும் ஆணழகன் அல்ல...
என்றுமே...
----- சில உண்மைகளுடன் ஷ்ருதி..

No comments:

Post a Comment