Friday 12 June 2015




கணிதத்தையும் காதலிக்க 
கற்றுக்கொடுத்த கர்மவீரர் நீ !!

சுழியமா இருந்த மாணவர்களுக்கு 
சுற்றத்தையும் மற்றத்தையும் உணர்த்தி 
சுழியத்துக்கு முன் ஒன்றை
நிலைநாட்டியவன் நீ!!

ஒன்றயும் ஒன்றயும் கூட்டு
இரண்டு வரும் கூடவே
இரண்டு மதிப்பெண் வரும்
என்று கூறும் ஆசானாக மட்டும் நில்லாமல்
வாழ்கை என்னும் தேர்வில்
எதை கூட்ட வேண்டும்
எதை கழிக்கவேண்டும்
என்று மாணவர் முன்னேற்றத்திற்க்காக
தோள்குடுக்கும் தோழன் நீ!! 

காகிதங்கள்,புத்தகங்கள் ,கணினி
என எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும்
கூடியிருக்கும் கூட்டத்தையே
ஈர்க்கும் உன் குரலுக்கு ஈடுஆகாது !! 

பட்டங்களும், பதவிகளும்
போதவில்லை உன்னை கவுரவிக்க !!
பதக்கக்ங்களும் யாசிக்கின்றன
பனிவுடன் இருக்கும் உன்கை சேர!! 

பாடத்தை படிபதற்க்கும் ,
பாடத்தை கற்பதற்க்கும்
இருக்கும் நூலளவு வித்தியாசத்தை
உணர்ந்தேன் உன் வகுப்பில் !!

பாடத்தை மட்டும் நாங்கள்
கற்றுக்கொள்ளவில்லை,
காலத்தையும் தாண்டி காலூன்றி
வாழும் யுக்தியையும் தான் !!

தாய்தந்தையர் வாழ்கையை தந்தனர்..
ஆனால் அந்த வாழ்கையை
நெறிவுடனும் அறிவுடனும்
வாழ கற்றுக்கொடுத்ததால்
என்றும் நீ தாய் தந்தைக்கும் மேலானவன் !! 

எங்கள் வாழ்கை எனும்
விடுகதைக்கு விடை தருபவன் நீ !!

வாழ்கை எனும் விளையாட்டில்
நடுநிலமையுடன் விளங்கும் நடுமையரசன் நீ !! 

வாழ்கை என்னும் பாதையில்
வழிக்காட்டும் வழிக்காட்டி நீ!!

எங்கள் வாழ்கை தொடுவானம் போல்
இருந்தாலும் அதை வானவில்லாக
மாற்ற வானத்திற்க்கும்
ஏணி அமைத்து
ஏறு என்று கூறும் ஏகாந்தன் நீ !! 

மார்த்தட்டி பெறுமிதத்துடன் கூறுகிறேன்
என்றும் உன் மாணவர்கள்
விழுதுகளுடன் வேரூண்டி வாழ்வாரே..
ஒருபோதும் விழமாட்டார்..
ஏனெனில் விதை
வித்த்தவவன் நீ அல்லவா??
இன்றும் அனத்து மாணவர்களும்
ஆச்சிரியத்துடன் பார்க்கும் ஒரே
ஆசிரியர் நீ !! 

அதட்டுபவன் மட்டும் ஆசான் அல்ல ,
அன்புடன் அரவனிப்பவனும் ஆசான்
என்பதை வாழ்ந்து காட்டும்
அன்பின் வல்லுநர்க்கு பிறந்தநாள்..
வாழ்த்த வயதின்ரி வணங்குகிறேன் !!
--ஷ்ருதி ---
கவிதைகளுடன் நான்

No comments:

Post a Comment