Saturday 27 June 2015

என்ன நடந்திருந்தாலும்
என்ன நடந்தாலும் ..
என்ன நடக்க இருந்தாலும்..
என்னுடய நீ உன்னுடைய நான் 
என்றும் மாறாது !!

என்றும் உன்னுடைய ஷ்ருதி !!
கவிதைகளுடன் நான் !!


Tuesday 16 June 2015



தோழனுக்காக தோழமையோடு !!!

தோழா என்று அழைத்தேன்
தோழமை பிறந்தது
நண்பா என்று அழைத்தேன்
நம்பிக்கை மலர்ந்தது..

என் அழுகாச்சி கண்ணீரையும்
நீ
ஆனந்தக் கண்ணீராய்
மாற்றினாய்

சற்றும் சஞ்சலம் இல்லாமல்
இருக்கும் நட்பு...
வியப்பு..

நம் பயில வந்த
வகுப்பறை பயின்றது
நம் தூய்மையான நட்பை...

கடவளிடம் மேஜைகளும்
யாசிக்கின்றன
நம் நட்பு
வாணம் போல்
நீண்டு வாழி...

அய்யகோ..
தமிழ் மொழி தவிக்கிறது
நம் நட்பை
"நட்பு" என்னும் மூன்று
எழுத்தால் விவரிக்க
முடியவில்லை என்று....

கல்லூரி சிநேகம்
காலமெல்லாம் என்பர்...
நம் சிநேகம்
காலத்தையும் தாண்டும்
என்ற நம்பிகையோடு....

-----ஷ்ருதி----
[[கவிதைகளோடு நான்]]

Saturday 13 June 2015


அனைத்து பாசமமும்
பொய்யாக
இருக்க வேண்டும்
என வேண்டுகிறேன்
நீ மற்ற 
பெண்களிடம்
அணுகும்
போது !!!!
ஷ்ருதி heart emoticon
[[கவிதைகளுடன் நான்]]
heart 


ஒப்புக்கொள்ளுஙள்
ஒருவனுக்குள்
இருக்கும் சிறு
பயங்களே
ஒருவனை
நேர்மையாணவர்களாக
மாற்றுக்கின்றன
.
.
.
அளவான பயங்கள்
நெறிவான வாழ்வுக்கு
தேவை படுகிண்றன !!!!
----ஷ்ருதி----
[[கவிதைகளுடன் நான்]]
 — 

Friday 12 June 2015



காமம் என்றால் என்ன?
ஹார்மோன் சுரபதின் விளைவா??
உடலின்பம் தேடும் படலமா??
நாம் அடக்கி வைத்த
வெறியின் வெளிபாடா??
நாம் ரசித்த கவர்ச்சியை
அடையும் சாலையா??
சஞலங்களையும், சபலத்தையும்
அடையும் சந்தர்ப்பமா??
.
.
.
காமம் - காதலை அடையும் அழகிய வழி..
ஆம் காமத்தில் காதல் இருக்கிறது...
ஈறுடல் சேர்ந்தால் வரும்
ஆனந்தம் காமமா??
சற்றே யோசியுங்கள்
கர்த்தர் முன்னிலையில்
முத்தமிடும்
மனமக்களிடம் இருப்பது
காதலா? இல்லை காமமா என்று...

காமதிற்க்கும் காதலுக்கும் இருக்கும்
நூல் அளவு வித்யாசம் தான்
"காதலை" அழகு படுத்துகிறது..
காமத்தில் காதலிருப்பதினால் மட்டுமே
வேதனை வலிகூட இன்பமளிக்கிறது..
சகமனிதராய் , சகோதரியாய்
பார்க்க தெரியாத "சாதான்களுக்கு "
தெரியாது காதலின் அருமையை..
ஆண்டு ஆயிரம் ஆயினும்
அவர்களால் உணர முடியாது
அதன் தூய்மையை..
பெண்ணின் காமத்தை வேட்டையாடி பெறாதே,
மனதை வென்று பெறு...
கற்பை சூறையாடுவதால்
உன் ஆண்மைக்கு அங்கீகாரம் இல்லை..
அவள் கனவுகளை நிறைவேற்றி
அவளை அடைந்துக்கொள்,
இவ்வுலகிள் உன்னைதவிர
வேரு யாவரும் ஆணழகன் அல்ல...
என்றுமே...
----- சில உண்மைகளுடன் ஷ்ருதி..


அவர்களை தவிர்க்கலாம்;
தண்டிப்பை தகர்கலாம்;
வலியால் துவண்டு போகலாம்;
மறக்க மறுத்தாலும்
நினைப்பதை நிறுத்தலாம்;
தண்டிக்கலாம்
தண்டித்துக்கொள்ளலாம்;
ஞாயபகத்தை நிராகரிக்கலாம்
மணதை மறுத்து
ம(இ)ருமனதோடு மாறலாம்;
புலம்பலை புதைத்து
புன்னகையை போர்வையாக்கி
வாழ பழகலாம்;
வாழ்க்கையும் நகரலாம்;
ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும்
ஆயிரம் ஆயிரமாய் இன்பம் பெறுத்தாலும்;

குடிலுக்குள் ஓழிந்த
குட்டி பூணை போல்;
மனதில் மூளையில்,
மெல்லிய ஓரத்தில்,
ஓர் நினைவு,
ஓர் வலி,

" என்ன ஆயினும் எனக்கு கிடைக்காத ஒன்றாய் நிலைத்து விட்டாயே.. "
என நினைக்கும் போதே 
ஓர் சொட்டு கண்ணீருடன்
கண்ணைத் தோட்டு
பிரிகின்றது,
அந்த நினைவுகளும், வலிகளும் !!!

-----பிரிந்த கண்ணீருடன் ஷ்ருதி
 — 


எதிர் பார்த்த திருப்பஙள்...
எதிர் பார்காத நேரத்தில்...
எதிர் பார்க்கவே முடியாத வலியை...
எதிர்து வாழும் போது ..
உணர்கிறேன்
வாழ்கையோட எதாற்த்தங்ளை!!!! 

--- எதாற்த்தங்ளுடன் ஷ்ருதி--
 — 



கணிதத்தையும் காதலிக்க 
கற்றுக்கொடுத்த கர்மவீரர் நீ !!

சுழியமா இருந்த மாணவர்களுக்கு 
சுற்றத்தையும் மற்றத்தையும் உணர்த்தி 
சுழியத்துக்கு முன் ஒன்றை
நிலைநாட்டியவன் நீ!!

ஒன்றயும் ஒன்றயும் கூட்டு
இரண்டு வரும் கூடவே
இரண்டு மதிப்பெண் வரும்
என்று கூறும் ஆசானாக மட்டும் நில்லாமல்
வாழ்கை என்னும் தேர்வில்
எதை கூட்ட வேண்டும்
எதை கழிக்கவேண்டும்
என்று மாணவர் முன்னேற்றத்திற்க்காக
தோள்குடுக்கும் தோழன் நீ!! 

காகிதங்கள்,புத்தகங்கள் ,கணினி
என எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும்
கூடியிருக்கும் கூட்டத்தையே
ஈர்க்கும் உன் குரலுக்கு ஈடுஆகாது !! 

பட்டங்களும், பதவிகளும்
போதவில்லை உன்னை கவுரவிக்க !!
பதக்கக்ங்களும் யாசிக்கின்றன
பனிவுடன் இருக்கும் உன்கை சேர!! 

பாடத்தை படிபதற்க்கும் ,
பாடத்தை கற்பதற்க்கும்
இருக்கும் நூலளவு வித்தியாசத்தை
உணர்ந்தேன் உன் வகுப்பில் !!

பாடத்தை மட்டும் நாங்கள்
கற்றுக்கொள்ளவில்லை,
காலத்தையும் தாண்டி காலூன்றி
வாழும் யுக்தியையும் தான் !!

தாய்தந்தையர் வாழ்கையை தந்தனர்..
ஆனால் அந்த வாழ்கையை
நெறிவுடனும் அறிவுடனும்
வாழ கற்றுக்கொடுத்ததால்
என்றும் நீ தாய் தந்தைக்கும் மேலானவன் !! 

எங்கள் வாழ்கை எனும்
விடுகதைக்கு விடை தருபவன் நீ !!

வாழ்கை எனும் விளையாட்டில்
நடுநிலமையுடன் விளங்கும் நடுமையரசன் நீ !! 

வாழ்கை என்னும் பாதையில்
வழிக்காட்டும் வழிக்காட்டி நீ!!

எங்கள் வாழ்கை தொடுவானம் போல்
இருந்தாலும் அதை வானவில்லாக
மாற்ற வானத்திற்க்கும்
ஏணி அமைத்து
ஏறு என்று கூறும் ஏகாந்தன் நீ !! 

மார்த்தட்டி பெறுமிதத்துடன் கூறுகிறேன்
என்றும் உன் மாணவர்கள்
விழுதுகளுடன் வேரூண்டி வாழ்வாரே..
ஒருபோதும் விழமாட்டார்..
ஏனெனில் விதை
வித்த்தவவன் நீ அல்லவா??
இன்றும் அனத்து மாணவர்களும்
ஆச்சிரியத்துடன் பார்க்கும் ஒரே
ஆசிரியர் நீ !! 

அதட்டுபவன் மட்டும் ஆசான் அல்ல ,
அன்புடன் அரவனிப்பவனும் ஆசான்
என்பதை வாழ்ந்து காட்டும்
அன்பின் வல்லுநர்க்கு பிறந்தநாள்..
வாழ்த்த வயதின்ரி வணங்குகிறேன் !!
--ஷ்ருதி ---
கவிதைகளுடன் நான்

தமயருக்கும் தங்கைக்கும் கிடைத்த 
தங்க பொக்கிஷம் நீ !!

தோழமையோடு தொடுத்ததால் 
உன்னை தோழி எனவா ?? 

அக்கரையால் ஆச்சரியப்படுத்துவதால் 
அசிரீரி எனவா ??

ஆங்காங்கே கண்டிப்பதால்
ஆசான் எனவா??

தாய்மையோடு தாங்குவதால்
உன்னை தாயெனவா ???

எத்தனை எத்தனை பொருப்புகள்
கொண்ட உறவு நீ !!

உன் உணர்ச்சிகளை
உன்னுள் உரயவைத்து
மற்றவர்களுக்காக மறைத்து
மகிழ்ச்சி என்னும் மழையை
மனைக்கு பொழிந்த
மகாலக்க்ஷ்மி நீ !!

திகட்டாத திறமையும் ,
தடைகள் அனைத்தும்
தகற்க்கும் தைரியத்தையும்
கொண்டு திகழும் திலகாவதி நீ !!

சந்தோஷத்தை சபைக்கும் ,
கோபத்தை கண்ணாடிக்கும்
துறக்கும் தைரியசாலி நீ !!

சிப்பிக்குள் இருக்கும்
சிறு அதிசயமென முத்தையும்;
பாலை போல்
கலங்கபடாத பண்பையும் ;
மல்லிகை போல்
மாளிகை தோறும்
மனம் வீசும் மணதையும் ;
எஙகள் வீட்டில்
ஓளிவூட்டும் வைடுரியத்தையும்;
ஒன்று சேர்த்து
செல்வங்கள் அனைத்தும்
செழித்தோங்கும்
செல்வியென திரு "தமிழ் செல்வி"யை
கால்யாணம் என்னும் களத்தில்
விதைநெல்லென விதைக்கின்றோம் ;

காலத்தையும் கடந்து விலைச்சல்
மிகுந்த பயிராக வாழ
மனமாற்ந்து வாழ்த்துகிறோம் !!

---ஷ்ருதி--
கவிதைகளுடன் நான் !!!