Saturday, 11 February 2017

தைரியமும்  திமிரும்
வீரமும்  வீராப்பும்
உடையவளாகவே
அவள்  தந்தை  அவளை
வளர்த்தார்...

பாரதி  கண்ட  புதுமைப்பெண்
என்ற  அளவிற்கில்லாமல்..
தன  தகப்பன்  ஆசைப்பட்ட
தைரியசாலியாகவே
திகழ்ந்தாள்..

அச்சம்  நாணம்  மடம்  பயிர்ப்பு..
பெண்ணிற்குரிய  பட்டியலில்
அச்சத்தை  நீக்கு  என்று
ஐந்து  வயதிலே
அவள்  அப்பா  அறிவுறுத்தினார்...

மனதால்  வலிமையுடையவள்
என  உணரவைத்தவர்
உடலால்  வலிமையற்றவள்
என்பதை  உரைக்க  மறந்துவிட்டார்...

அத்தனை  வலிமைகொண்டு
போராடியும்
அவர்களிடமிருந்து அவளால்
விடுபட முடியவில்லை...

சிற்றெறும்பு  கூட  சீண்டாமல்
செல்லமாக  வளர்ந்தவள்
இன்று சிதைந்துகிடக்கிறாள்
என  உணரும்  வேளையில்
அவள்  கண்கள்  கசிகிறது...

உடம்பு வலியைவிட
இதை  உணர்வது
அதிக வலி என உணர்கிறாள்...

தன்னை  சிதைத்தவனை
சிறையிலிட வேண்டும்
என  இதயம்   ஆசைப்பட்டது...

ஆயினும்..

தன் அண்ணனிடம்கூட  சிறுசண்டையிட்டு
வீழ்வதை  விரும்பாத
தன்  தந்தை
மொத்தமாக  தான்  வீழ்ந்ததை
எப்படி  ஏற்பார்  என  எண்ணிக்கொண்டே
அடுத்த நாள்  அலுவலகத்திற்கு
அவசர அவசரமாக புறப்பட்டாள்...

வாழ்க்கை  நிஜங்களுக்கும்
வீழ்த்த வேண்டும்  என்ற
இலட்சியத்திற்கு  இடையே
" சராசரி வாழ்க்கை  நிஜங்கள் "
ஜெயித்தது..
                       
                              -----வாழ்க்கை நிஜங்களுடன்
                              --------------ஸ்ருதி-----------------













தனக்கு  பிறக்கவிருக்கும்

பெண்  குழந்தையை

தன்  தந்தை

வளர்த்தார்  போல்

வளர்க்க  வேண்டும்  என்பதே

அவள்  ஆண்டுகால  இலட்சியம்……….

நடந்த  அவலங்களையும்

நடக்கவிருக்கும்   அவலங்களையும்

உணரும்  வேளையில்

கண்களை மூடி  கடவுளை

வேண்டினாள்...


" ஆண்  பிள்ளை  போதும்..." என்று...

                                       மறுக்க முடியா நிஜங்களுடன்
                                       ------------ஸ்ருதி-------------

Saturday, 23 July 2016


என் வாழ்கை தான் என் எண்ணம் ,
என் எண்ணம் தான் என் வாழ்கை ,
ஆனால்,
என் வாழ்கையும் என் எண்ணமும் 
நீயாக இருப்பதனால் தான் 
உன்னை தான்டி எனக்குயோசிக்க தோன்றவுமில்லை தெரியவுமில்லை...
சில எண்ணங்களுடன்  ஷ்ருதி 

Thursday, 17 March 2016


கண்களின் நீரோட்டங்கள்
கவலைகளை கரைசேர்ப்பதில்லை...
சில வலிமையான போராட்டங்களே
 வழிகளை தேடி தருகின்றன...
விட்டுச்சென்ற கறையை
விதியென்று வெந்து போகாமல்
மதி இருக்கும் வரை
மடியாமல் வாழ்வேன்
என மாற்தட்டி கூறுங்கள்...
மேல் விழுந்த கறையும்
மெல்லக் கரையும் !!

 --- ஷ்ருதி---
கவிதைகளுடன் நான்

Friday, 11 September 2015


உன் விரல் நகம் போல் என்னை வெட்டி எரிந்தால் கூட ...
மீண்டும் அந்த நகம் போல்
உன்னிடம் வ(ள)ருவேன் !!!!
---அன்புடன் ஷ்ருதி 
(((கவிதைகளுடன் நான்))) 

விழிசேறும் நேரம்
விழித்த காதலுமில்லை;
காலம் ஆண்டு கடந்த
காதலுமில்லை..
மாறும் காலம் ஏற்ப்ப
மறையும் காதலுமில்லை
உற்றார் சொல் கேட்டு
உரையும் காதலுமில்லை
யார் என தெரியாத நேரத்தில்
யெதர்ச்சையாய் பேசிய
எதிர்கால வாழ்க்கையில்
எதிர்பாராமல் பிறந்த காதல் ...
எதிர்பார்க்கவே முடியாத
அளவு அக்கரயை சுமந்து
எல்லா எதிர்பார்பையும் இருசேர 
எதிர்க்க துணிந்த காதல் !!
இத்தனை அழகும் 
அடங்கிய காதல் ,
நம் காதல் !!!
----காதலுடன் ஷ்ருதி----

Tuesday, 1 September 2015


என் அத்தனை பெண்மையும்
அடங்கிபோகிறது
அவன் கூறும்
"அம்மு" என்ற
ஒற்றை வார்தையில்...

மீண்டும் ஒருமுறை நீ அழைப்பாயா???
--- உன் ஷ்ருதி--
கவிதைகளுடன் நான் !!!